search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் நாய்கள்
    X

    முகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் நாய்கள்

    வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் முகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறன் கொண்டவை என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக நாய் திகழ்கிறது. இது மனிதர்களின் நண்பனாக மாறியுள்ளது. வீட்டில் பாதுகாப்பிற்காகவும், தனிமையை குறைப்பதற்காவும் பலர் நாய்களை வளர்க்கின்றனர். நாய் மிகவும் நன்றியுள்ள மிருகமாக கருதப்படுகிறது. இந்நிலையில், மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறன் நாய்களுக்கு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஸ்பிரிஞ்சர் என்ற தனியார் நிறுவனம் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. நாய்கள் தங்கள் எஜமான்களின் முகபாவத்திற்கு ஏற்ப தலையை திருப்புகின்றன. கோபம், பயம் மற்றும் சந்தோஷமாக இருக்கும் போது தலையை இடது பக்கமாக திருப்புகின்றன. ஆச்சரியமாக முகத்தை வைத்திருக்க்ம் போது வலது பக்கமாக தலையை திருப்புகின்றன.

    ஒருவேளை அவர்கள் சோகமாக இருந்தால் நாய்களின் இதயத்துடிப்பு மிகவும் அதிகரிக்கிறது. இந்த ஆய்வு மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே உள்ள பாசத்தை எடுத்துக்காட்டுகிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழ்வதன் மூலம் நாய்கள் புதிய பண்புகளை வளர்த்துக்கொண்டுள்ளன. அவற்றின் மூலம் மனிதர்களுடன் பேசிப்பழகுகின்றன.

    நாய்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவற்றின் மூளை செயல்பாடு குறித்து அறிய முடிந்தது. மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் நாய்களின் மூளை தான் பெரும் பங்கு வகிக்கிறது.

    Next Story
    ×