என் மலர்
செய்திகள்

எரிமலையை தொடர்ந்து கவுதமாலாவை தாக்கிய நிலநடுக்கம்
கவுதமாலா நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் 62 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று அங்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #GuatemalaEarthquake
கவுதமாலா சிட்டி:
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று முன்தினம் வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. இதையடுத்து கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 62-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 10 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. #GuatemalaEarthquake
Next Story






