என் மலர்
செய்திகள்

அமெரிக்காவின் முதல் பெண் சிஐஏ இயக்குனராக பொறுப்பேற்றார் ஜினா ஹேஸ்பெல்
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முதல் பெண் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நேற்று பொறுப்பேற்று கொண்டார். #GinaHaspel #CIAdirector
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறி மந்திரியாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் நியமித்தார்.
அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் டிரம்ப் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை கடந்த 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. இதையடுத்து சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹஸ்பெல் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜினா ஹேஸ்பெல் சி.ஐ.ஏ. இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் ஆவார். #GinaHaspel #CIAdirector
Next Story






