search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஹவாஸ் தீவில் எரிமலை வெடித்ததால் பூமியில் விரிசல்
    X

    அமெரிக்க ஹவாஸ் தீவில் எரிமலை வெடித்ததால் பூமியில் விரிசல்

    அமெரிக்காவில் கிளாயுயா எரிமலை வெடித்ததின் அதிர்வு காரணமாக அங்கு பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. #Volcano
    ஹவாஸ்:

    அமெரிக்காவின் ஹவாஸ் தீவில் கிலாயுயா என்ற எரிமலை உள்ளது. அது கடந்த 3-ந்தேதி முதல் வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து லேசான புகை வெளியேறி வந்தது.

    இந்த நிலையில் நேற்று அந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து எரிமலை குழம்பு வழிந்தோடுகிறது. கரும்புகை வெளியேறுகிறது. நாலாபுறமும் பாறைகள் சிதறுகின்றன.

    எனவே பாதுகாப்பு கருதி கோனா கடற்கரை பகுதியில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



    கிளாயுயா எரிமலை வெடித்ததின் அதிர்வு காரணமாக அங்கு பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. முன்னதாக அப்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் நிறுவனங்களின் ஜன்னல்கள் கதவுகள் ‘படபட’ வென அடித்தன. அதன் பின்னர்தான் எரிமலையில் இருந்து கியாஸ் மற்றும் குழம்பு வெளியேறியது.

    கிளாயுயா எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. அதில் இருந்து வெளியான கரும்புகை விண்ணில் பரவியது. அதை மரத்தின் மீது ஏறி ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். #Volcano
    Next Story
    ×