என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானாவில் விமான தயாரிப்பு தொழிற்சாலை - இஸ்ரேல் நிறுவனத்திற்கு முதல்வர் அழைப்பு
    X

    அரியானாவில் விமான தயாரிப்பு தொழிற்சாலை - இஸ்ரேல் நிறுவனத்திற்கு முதல்வர் அழைப்பு

    இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரியானா முதல்வர் கட்டார், அரியானாவில் விமான தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என அந்நாட்டு நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliAerospaceIndustry #ManoharLal
    டெல் அவிவ் :

    இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரியானா மாநிலம் முதல்வர் மனோகர்லால் கட்டார் இன்று இஸ்ரேல் விமான தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டார். அங்கு விமானம் மற்றும் பாதுகாப்புத்துறையில் அந்நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய கண்டுபிடிப்புகளை இஸ்ரேல் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினார்கள்.

    இஸ்ரேல் விமான தயாரிப்பு நிறுவனம் இந்தியாவுடன் 1 பில்லியன் டாலர் மதிப்பில் செய்துள்ள ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பேசிய அதிகாரிகள், அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் துணை விமான தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ விரும்புவதாக விருப்பம் தெரிவித்னர்.

    இதையடுத்து, அடுத்த மாதம் ஹிசார் பகுதியை பார்வையிட வருமாறு அவர்களுக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் அழைப்பு விடுத்துள்ளார்.

    மேலும், இணையதள சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் உயர் தொழில்நுட்ப செயல்முறைகளையும் அதிகாரிகள் கட்டாரிடம் விளக்கினார்கள். துணை விமான உற்பத்தி தொழிற்சாலை நிறுவனம் மட்டுமல்லாமல் இணைய பாதுகாப்பு நிறுவனங்களிடமும் அரியானாவில் நிறுவனங்களை தொடங்க கட்டார் அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliAerospaceIndustry #ManoharLal
    Next Story
    ×