search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்முறையை தூண்டும் புகைப்படங்கள்- பிரான்ஸ் எதிர்க்கட்சி தலைவர் மரீன் லீ பென் மீது குற்றச்சாட்டு பதிவு
    X

    வன்முறையை தூண்டும் புகைப்படங்கள்- பிரான்ஸ் எதிர்க்கட்சி தலைவர் மரீன் லீ பென் மீது குற்றச்சாட்டு பதிவு

    பிரான்ஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மரீன் லீ வன்முறையை தூண்டும் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய முண்ணனி கட்சி தலைவரான மரீன் லீ பென் கடந்த 2015-ம் ஆண்டு வன்முறை புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அந்த புகைப்படங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் தலை துண்டித்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும், மற்றொரு மனிதரை உயிருடன் எரிக்கும் புகைப்படமும் இருந்தது.

    2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீசில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது நடைபெற்று சில வாரங்களுக்கு பின்னர் இந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்களை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக உள்ளது.

    இது வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

    மரீன் லீ பென் சென்ற ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    Next Story
    ×