என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலி நாட்டில் இன்று நிலநடுக்கம் - 6.1 ரிக்டர் ஆக பதிவு
    X

    சிலி நாட்டில் இன்று நிலநடுக்கம் - 6.1 ரிக்டர் ஆக பதிவு

    பசிபிக் பெருங்கடலோரம் தென் அமெரிக்காவின் மேற்கே அமைந்துள்ள சிலி நாட்டில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    சான்ட்டியாகோ:

    சிலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கலாமா நகரின் தென்கிழக்கே சுமார் 144 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 188 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று பிற்பகல் சுமார் 1.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.



    இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    நிலநடுக்கத்துக்கு பயந்து மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பதற்றத்துடன் வீதியில் குவிந்து நிற்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
    Next Story
    ×