என் மலர்

  செய்திகள்

  நம்பத்தகுந்த ஆதாரங்கள் அடிப்படையிலே ஜாதவுக்கு தூக்கு: பாகிஸ்தான்
  X

  நம்பத்தகுந்த ஆதாரங்கள் அடிப்படையிலே ஜாதவுக்கு தூக்கு: பாகிஸ்தான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நம்பத்தகுந்த ஆதாரங்கள் அடிப்படையிலே இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
  இஸ்லாமாபாத்:

  இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு உளவு குற்றச்சாட்டின்பேரில், பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில், இருநாட்டு உறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

  குல்பூ‌ஷண் ஜாதவை நாம் திரும்ப கொண்டு வருவதற்கு சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு தெரிவித்து உள்ளது. மேலும் உரிய ஆதாரங்கள் இல்லாமல் பாகிஸ்தான் அரசு தண்டனை வழங்கியுள்ளதாக இந்தியா கடுமையாக குற்றம்சாட்டியது.

  இந்நிலையில், நம்பத்தகுந்த, குறிப்பாக ஆதாரங்கள் அடிப்படையிலே இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் வெளியுறவுத் துறைக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஷ் கூறுகையில், ஜாதவ் வழக்கில் சட்டத்தின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

  Next Story
  ×