என் மலர்

  செய்திகள்

  நேபாளம், சீனா இடையே முதல் ராணுவ கூட்டுப் பயிற்சி: ஏப். 16-ல் தொடங்குகிறது
  X

  நேபாளம், சீனா இடையே முதல் ராணுவ கூட்டுப் பயிற்சி: ஏப். 16-ல் தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நேபாளம், சீனா நாடுகளுக்கு இடையே முதல் கூட்டு ராணுவ பயிற்சி வரும் ஏப்ரல் 16-ம் தேதி காத்மண்டு நகரில் தொடங்குகிறது.
  காத்மண்டு:

  நேபாளம், சீனா நாடுகளுக்கு இடையே முதல் கூட்டு ராணுவ பயிற்சி வரும் ஏப்ரல் 16-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காத்மண்டு நகரில் தொடங்குகிறது. 

  சகர்மாதா நட்பு-2017 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டுப் பயிற்சி வருகின்ற ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சகர்மாதா என்பது எவரெஸ்ட் சிகரத்தின் நேபாள பெயர். இது நேபாளம் மற்றும் சீனா இடையே உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.   சுமார் 10 நாட்கள் நடைபெறும் இந்த ராணுவ பயிற்சியானது, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக நேபாள ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  நேபாளம் மற்றும் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×