என் மலர்

  செய்திகள்

  லிபியா அருகே அகதிகள் படகு மூழ்கி விபத்து: 97 பேர் மாயம்
  X

  லிபியா அருகே அகதிகள் படகு மூழ்கி விபத்து: 97 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லிபியா அருகே உள்ள கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 97 பேர் மாயமானதாக தகவல் வெளியானது.
  திரிபோலி:

  சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாக நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால் அந்நாடுகளில் இருந்து மக்கள் மேற்குகுலக நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்து வருகின்றனர்.

  அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளில் கரையேறி வருகின்றனர்.  இவ்வாறு மத்திய தரைக்கடல் வழியாக செல்லும் அகதிகளின் படகுகள் அவ்வவ்போது விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்து வருகின்றனர்.   லிபியா அருகே உள்ள கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 97 பேர் மாயமானதாக லிபியா 

  கடற்படை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது வெளியானது. மாயமானவர்களில் 15 பெண்கள், 5 குழந்தைகள் அடங்குவர்.

  இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஏற்பட்டுள்ள அகதிகள் படகு விபத்தில் இதுவரை 590 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 3 மாதங்களில் மட்டும் லிபியாவில்  இருந்து இத்தாலியில் 24 ஆயிரம் அகதிகள் கரையேறியுள்ளனர்.
  Next Story
  ×