என் மலர்

  செய்திகள்

  இலங்கை: பாலியல் தொழிலில் ஈடுபட்ட ரஷிய பெண்கள் 5 பேர் கைது
  X

  இலங்கை: பாலியல் தொழிலில் ஈடுபட்ட ரஷிய பெண்கள் 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் பாலியல் தொழிலில் ரஷிய நாட்டு பெண்கள் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
  கொழும்பு:

  இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள வெள்ளவத்தையில் சொகுசு வீட்டில் ரஷிய இளம் பெண்கள் சிலர் தங்கி இருந்தனர். அவர்கள் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரஷிய பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

  சுற்றுலா விசாவில் இலங்கை வரும் ரஷிய பெண்கள் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது சுற்றுலா விசா காலம் முடிந்ததும் சொந்த நாட்டுக்கு விமானத்தில் சென்று விடுவார்கள். அதன் பிறகு மற்றொரு குழு இதே போல் சுற்றுலா விசாவில் வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி பாலியல் தொழிலை தொடருவார்கள்.

  இவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்த அதிகபட்சம் ரூ 75 ஆயிரம் வரை வசூலிப்பதாகவும், தினமும் 3 வாடிக்கையாளர்களை தேடிக்கொள்வார்கள் என்றும் கொழும்பில் குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மொத்தம் 5 ரஷிய இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாக முக்கிய பிரமுகர் ஒருவரையும் கொழும்பில் போலீசார் கைது செய்துள்ளனர்.

  கைதான 5 ரஷிய பெண்களும் கொழும்பில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×