search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியேறுபவர்களுக்கு ஆதரவாக 1,470 பொருளாதார நிபுணர்கள் டிரம்புக்கு கடிதம்
    X

    குடியேறுபவர்களுக்கு ஆதரவாக 1,470 பொருளாதார நிபுணர்கள் டிரம்புக்கு கடிதம்

    குடியேறுபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் 1,470 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.
    வாஷிங்டன்:

    குடியேறுபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு பொருளாதார நிபுணர்கள் 1,470 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

    நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, அதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் நாட்டின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.

    குடியேறுபவர்களை வெளியேற்றுவதன் மூலம் கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் பொருளாதார இழுவை குறித்து கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் குழந்தை விகித ஓய்வில் இருந்து எந்தவித பொருளாதார தடைகளையும் சரிசெய்யும் முடியும் என்பதையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

    இதுதவிர ஸ்மார்ட் குடியேற்றக் கொள்கை மூலம் சிறந்த குடியேற்றத்தை அளிக்கும் விதமாக, அவர்களின் நன்மைகளை அதிகப்படுத்தி செலவுகளைக் குறைக்க செய்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தியுள்ளனர். இந்த கடிதத்தை அமெரிக்காவை சேர்ந்த 1,470 பேர் அனுப்பி வைத்துள்ளனர். இதில் 6 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அதிகளவிலான கடிதங்கள் அரசியல் பன்முகத்தன்மையை வலியுறுத்துபவர்களிடமிருந்து வந்துள்ளன. இதில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பொருளாதார ஆலோசகரான ஆஸ்டன் கூல்ஸ்பி மற்றும் ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் பணிபுரிந்த கிளென் ஹப்பர்டு உள்ளிட்ட பலரிடமிருந்து கடிதங்கள் வந்துள்ளன.
    Next Story
    ×