search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டு தலிபான் தீவிரவாதிகளை தூக்கிலிட்ட பாகிஸ்தான்
    X

    இரண்டு தலிபான் தீவிரவாதிகளை தூக்கிலிட்ட பாகிஸ்தான்

    பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தலிபான் தீவிரவாதிகள் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    உலக அளவில் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளில் பாகிஸ்தானும் முக்கியமான ஒன்று. தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகளும் அதனால் பெருமளவு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றது.

    தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

    பொதுமக்களை கொலை செய்தல், ராணுவ படைகள், சட்ட அமலாக்க ஏஜென்சிகள் மற்றும் போலியோ தடுப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.



    இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தலிபான் தீவிரவாதிகள் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சிறையில் உயர் பாதுகாப்புடன் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றங்கள் இதுவரை 160-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. அதில் நேற்று 23-வது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×