என் மலர்

  செய்திகள்

  ஆப்பிரிக்க அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்பனை
  X

  ஆப்பிரிக்க அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்பனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயரும் அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்கப்படுகின்றனர்.
  பெங்காசி:

  உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

  அவ்வாறு வருபவர்களில் சிலர் வரும் வழியில் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுகின்றனர். சிலரோ கடத்தல்காரர்களிடமும், தீவிரவாதிகளிடமும் சிக்கி கொள்கின்றனர்.  இவர்களை பிணைக் கைதிகளாக்கி லிபியாவுக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள சபா நகரில் அடைத்து வைக்கின்றனர். பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு டெலிபோன் செய்து விடுவிக்க பிணைத் தொகை கேட்கின்றனர்.

  இத்தொகையை தராதவர்கள் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். சரிவர உணவு வழங்காமல் துன்புறுத்தப்படுகின்றனர். மேலும், அங்கு கூடும் அடிமை சந்தைக்கு அழைத்து செல்லப்பட்டு விற்று விடுகின்றனர்.

  பெண் அகதிகளையும் விட்டு வைப்பதில்லை. அவர்களை ‘செக்ஸ்’ அடிமைகளாக்கி விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இந்த அதிர்ச்சி தகவலை சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
  Next Story
  ×