என் மலர்

  செய்திகள்

  ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக சிரியா கடின விலையை கொடுக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
  X

  ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக சிரியா கடின விலையை கொடுக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிரிய அரசு படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், அதற்கு உரிய மிகவும் கடினமான விலையை கொடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  நியூயார்க்:

  சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

  இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 400-க்கும் மேற்பட்டோர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டிருந்தது.

  இந்நிலையில், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக சிரிய மிகவும் கடினமாக உரிய விலை கொடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மட்டீஸ், சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகவே எங்களது முதன்மையான தாக்குதல் இருக்கும் என்று கூறினார்.
  Next Story
  ×