search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தர பாக். ராணுவம் தயார்: நவாஸ் ஷெரீப் கொக்கரிப்பு
    X

    எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தர பாக். ராணுவம் தயார்: நவாஸ் ஷெரீப் கொக்கரிப்பு

    இந்தியருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க ராணுவம் தயார்நிலையில் உள்ளதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்
    இஸ்லாமாபாத்:

    இந்தியருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இதுபற்றி நேற்று கருத்து கூறினார். பாகிஸ்தான் விமானப்படை அகாடமியில் பயிற்சி முடித்த மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    பாகிஸ்தான், அமைதியை விரும்பும் நாடு. எல்லா நாடுகளுடனும், குறிப்பாக அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் நட்புறவை விரும்புகிறது. எல்லோருக்கும் நட்புக்கரம் நீட்ட பாகிஸ்தான் தயங்கியதே இல்லை. அமைதியை விரும்பும் அதே நேரத்தில், நமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாப்பதில் மெத்தனமாக இருக்க மாட்டோம்.

    பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் மீது நாடு முழு நம்பிக்கை வைத்துள்ளது. நவீனகால சவால்களை சந்திக்கும் வகையில், ராணுவத்துக்கு ஆயுத உதவி அளிப்போம். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க ராணுவம் தயார்நிலையில் உள்ளது. அதற்கான முழு திறனுடன் இருக்கிறது.

    இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசினார்.

    Next Story
    ×