search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் மாதேசிக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய மசோதா தாக்கல்
    X

    நேபாளத்தில் மாதேசிக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய மசோதா தாக்கல்

    நேபாளத்தில் மாதேசி சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வகை செய்யும் புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    காத்மாண்டு:

    நேபாளத்தில் அமலுக்கு வந்துள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாதேசி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்றும், மாநில எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இவர்களின் போராட்டம் மற்றும் வன்முறையின் விளைவாக சுமார் 50 பேர் பலியாகி உள்ளனர். தற்போது உள்ளாட்சித் தேர்தல் மே 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மாதேசி கட்சிகள் கூறியுள்ளன.


    இந்த சூழ்நிலையில், போராடி வரும் மாதேசி கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வகை செய்யும் புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த புதிய மசோதாவின்படி, மாகாணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் எல்லைகள் தொடர்பாக, ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக ஒரு மத்திய ஆணையத்தை அரசாங்கம் அமைக்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்த முந்தைய சட்டத்திருத்த மசோதாவை மத்திய மந்திரி அஜய சங்கர் நாயக் வாபஸ் பெற்றதையடுத்து, இந்த புதிய மசோதா இன்று பாராளுமன்ற செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×