என் மலர்

  செய்திகள்

  பாரிஸ் விமான நிலையத்தில் பரபரப்பு- ராணுவ வீரரின் துப்பாக்கியை பறித்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
  X

  பாரிஸ் விமான நிலையத்தில் பரபரப்பு- ராணுவ வீரரின் துப்பாக்கியை பறித்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஓர்லி விமான நிலையத்தில் இன்று ராணுவ வீரரின் துப்பாக்கியை பறித்து கொண்டு தப்பியோடியவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
  பாரிஸ்:

  பாரிஸ் நகரில் உள்ள ஓர்லி விமான நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் விமானங்களின் வருகையும் புறப்பாடும் நடைபெற்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் பயணிகள் பரபரப்பாக வந்து, சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் அங்கு நின்றிருந்த ஒரு ராணுவ வீரரை நெருங்கி வந்தார்.

  திடீரென்று அந்த வீரரின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவியபடி, விமான நிலைய வரவேற்பு பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ஓடி ஒளிய முயன்றார். பின்தொடர்ந்து எச்சரித்தபடி விரட்டிச் சென்ற பாதுகாப்பு படையினர் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அவரை சுட்டுக் கொன்றதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


  கொல்லப்பட்ட நபர் யார்? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஓர்லி விமான நிலையத்தில் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது.
  Next Story
  ×