search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
    X

    பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.
    பாரீஸ்:

    இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. அவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

    பாரீஸ் நகரின் வீதிகள் மற்றும் பொது மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் குப்பை கிடங்குகள் சாக்கடை கால்வாய்கள், திறந்த வெளி காலியிடங்களில் பொறிகள் மற்றும் மருந்துகள் வைத்து எலிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை பாரீஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ தெரிவித்தார்.
    Next Story
    ×