என் மலர்

    செய்திகள்

    வீட்டுச் சிறையில் ஹபீஸ் சயீத்: பாக். தீவிரவாத அமைப்புக்கு புதிய தலைவன் நியமனம்
    X

    வீட்டுச் சிறையில் ஹபீஸ் சயீத்: பாக். தீவிரவாத அமைப்புக்கு புதிய தலைவன் நியமனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜமாத் உத் தாவா-வின் தலைவன் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த அமைப்பின் புதிய தலைவனாக ஹபீஸ் அப்தெல் ரஹ்மான் மக்கி நியமிக்கப்பட்டுள்ளான்.
    இஸ்லமாபாத்:

    பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.

    லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த மாதம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அத்துடன் அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

                                                           ஹபீஸ் சயீத்

    இந்த நிலையில் ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் பிடி மேலும் இறுகி உள்ளது. அவர் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது பெயர் தற்போது தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

    அவரது நெருங்கிய கூட்டாளிகளான காஜி காசிப், பைசாலாபாத்தை சேர்ந்த அப்துல்லா ஒபைது, முரித்கேயை சேர்ந்த ஜாபர் இக்பால், அப்துர் ரகுமான் ஆகிய நால்வரது பெயர்களும் பயங்கரவாத தடை சட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாண அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

    பாகிஸ்தான் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி ஹபீஸ் சயீத், காஜி காசிப், அப்துல்லா ஒபைது, ஜாபர் இக்பால், அப்துர் ரகுமான் ஆகிய மொத்தம் 1,450 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் ஹபீஸ் சயீத் உள்பட 37 பேர் வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் 1997-ம் ஆண்டு இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மூலமாக தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுளது.

    இந்த சட்டத்தின்கீழ், ஜமாத் உத் தாவா தலைவர் ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கைது செய்து வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளது.

    இந்நிலையில், அந்த இயக்கத்தில் அவருக்கு அடுத்ததாக இரண்டாம்கட்ட தலைவராக  ஹபீஸ் அப்தெல் ரஹ்மான் மக்கி என்பவர் செயல்பட்டு வருகிறார். ஹபீஸ் சயீதின் மைத்துனரான இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள அமெரிக்க அரசு, மக்கியின் தலைக்கு 20 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.

    ஹபீஸ் சயீத் வீட்டுச் சிறையில் இருந்துவரும் நிலையில் அவரது பணிகளை எல்லாம் ஹபீஸ் அப்தெல் ரஹ்மான் மக்கி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜமா உத் தாவா இயக்கத்தின் புதிய தலைவராக மக்கி நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×