என் மலர்

    செய்திகள்

    மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள்: அமெரிக்க நிபுணர் கருத்து
    X

    மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள்: அமெரிக்க நிபுணர் கருத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பான வெற்றியின் மூலம் மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள் என அமெரிக்க நிபுணர் கருத்து தெரிவித்துள்ளனர்
    வாஷிங்டன்:

    இந்த தேர்தல் முடிவுகள் குறித்து சர்வதேச அமைதிக்கான தெற்கு ஆசிய திட்ட பொறுப்பாளரும், அமெரிக்காவை சேர்ந்த இந்திய அரசியல் நிபுணருமான மிலன் வைஷ்ணவ் கூறியதாவது:-

    இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பான வெற்றி மிகப்பெரிய தேர்தல் பரிசு. இதுவும், உத்தரகாண்ட் மாநில வெற்றியும் மோடிக்கு ஆதரவான ஓட்டுகள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிகிறது. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி விளக்குகிறது. பிரதமர் மோடியை ‘அதிரடி நடவடிக்கை மனிதர்’ என்றே மக்கள் கருதுகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி பஞ்சாப் வெற்றியை ஆறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான். ஒரு மாநிலத்தை (கர்நாடகம்) மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள காங்கிரசுக்கு, அதுவும் அடுத்த ஆண்டு சுலபமாக கைமாறிவிடும் சூழ்நிலையில், இந்த வெற்றியை எதிர்பார்க்க வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் கிடைத்த தேர்தல் முடிவு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது விவாதிக்கக்கூடிய ஒன்று.

    மாயாவதிக்கும், அவரது பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உ.பி. தேர்தல் முடிவு மிகப்பெரிய பின்னடைவு. 2012, 2014 (பாராளுமன்றம்), 2017 ஆகிய 3 தேர்தல்களில் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ள அந்த கட்சிக்கு தொடர்ந்து அரசியலில் நீடிக்க முடியுமா? என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மிலன் கூறியுள்ளார். 
    Next Story
    ×