என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
எச்1பி விசா தொடர்பாக டிரம்ப் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க மாட்டார் - புதிய தகவல்
By
மாலை மலர்2 Feb 2017 6:17 PM GMT (Updated: 2 Feb 2017 6:17 PM GMT)

எச்1பி விசா தொடர்பாக டிரம்ப் நிர்வாகம், நிர்வாக உத்தரவு எதையும் பிறப்பிக்கும் திட்டம் இல்லை” என வாஷிங்டனில் குடியரசு கட்சி இந்து கூட்டணியின் தலைவர் ஷாலப் ஷால்லி குமார் தெரிவித்தார்
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப், “எச்1பி விசா, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து வருகிறது. நான் அமெரிக்க ஜனாதிபதியானால் அதை ரத்து செய்வேன்” என தடாலடியாக அறிவித்தார்.
இப்போது அவர் வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆகி விட்டார். இந்தநிலையில், எச்1பி விசாக்களை வழங்குவதை கட்டுப்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாவை பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பளத்தை 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சத்து 40 ஆயிரம்) இரு மடங்காக உயர்த்துவதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.
இந்தநிலையில் வாஷிங்டனில் குடியரசு கட்சி இந்து கூட்டணியின் தலைவர் ஷாலப் ஷால்லி குமார் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “இன்னும் கூடுதலான எச்1பி விசா தேவைப்படுகிறது. இந்த விசாவில் வரக்கூடிய இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது” என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “எச்1பி விசா தொடர்பாக டிரம்ப் நிர்வாகம், நிர்வாக உத்தரவு எதையும் பிறப்பிக்கும் திட்டம் இல்லை” என குறிப்பிட்டார்.
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், மிகப்பெரிய நன்கொடையாளர், டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆவீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது இவர், அதற்கான வாய்ப்பு முழுமையாக இல்லை என மறுக்கவில்லை.

Next Story
×