search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியரால் செக்ஸ் தொந்தரவுக்கு ஆளானேன்: இங்கிலாந்து எம்.பி
    X

    இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியரால் செக்ஸ் தொந்தரவுக்கு ஆளானேன்: இங்கிலாந்து எம்.பி

    சுமார் 40 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் சத்யமூர்த்தி, பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண் போடவேண்டுமானால் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என தன்னிடம் வற்புறுத்தியதாக இங்கிலாந்து பெண் எம்.பி ஹரியேத் ஹார்மென் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துனைத் தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான ஹரியேத் ஹார்மென் சமீபத்தில் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது ,” 1972-ம் ஆண்டில் யார்க் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது அரசியல் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறும் மதிப்பெண்னை நான் இழந்து விட்டேன், உடனே பேராசிரியர் டி.வி சத்யமூர்த்தி தன்னை அழைத்து பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண் போடவேண்டும் என்றால் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறினார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த இடத்தைவிட்டு உடனே வெளியேறிவிட்டேன்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    மேலும், அவர் கூறியதாவது, “ அப்போதைய சூழ்நிலை அப்படிதான் இருந்தது. ஏனென்றால், அதிகாரம் அவர்கள் கையில் இருக்கும் போது அவர்கள் சொல்வது தான் நியாயம் என ஆகிவிடுகிறது. இச்சம்பவத்தை நான் வெளியில் தெரிவித்தாலும் அதை கேட்கக் கூட யாரும் இல்லை” என கூறியுள்ளார்.

    இந்தியாவைச் சேர்ந்த டி.வி.சத்யமூர்த்தி 1929-ம் ஆண்டில் சென்னையில் பிறந்தவர். இந்து பணாரஸ் கல்லூரியில் பட்டம் பயின்ற அவர் 1976-ம் ஆண்டில் இங்கிலாந்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 1998-ம் ஆண்டில் அவர் மரணமடைந்தார். சில புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

    ஹரியேத் ஹார்மெனுக்கு நடந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள 77 வயதான சத்யமூர்த்தியின் மனைவி கரோல்,” ஹார்மெனுக்கு நிகழ்ந்தது மிகவும் மோசமானது. நம்புவதற்கு கடினமாக உள்ளது. சத்யமூர்த்தி மிகவும் நகைச்சுவை சுபாவம் மிகுந்தவர். அவர் இப்படி செய்திருக்க மாட்டார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

    ஹார்மெனுக்கு நடந்த இந்த சம்பவத்திற்கு யார்க் பல்கலைக்கழக நிர்வாகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×