search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம்
    X

    ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம்

    ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைய மனு செய்துள்ளனர்.
    பெர்லின்:

    துருக்கியில் கடந்த ஜூலை மாதம் அதிபர் ரீசெப் தயீப் எர்டோகனுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. ஆனால் அது பொதுமக்கள் உதவியுடன் முறியடிக்கப்பட்டது.

    அதையடுத்து புரட்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பதவி நீக்கமும் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் புரட்சியில் ஈடுபட்டு ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் 40 பேர் ஜெர்மனியில் தஞ்சம் கேட்டு மனு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ‘நேட்டோ’ படை பிரிவில் பணியாற்றியவர்கள்.

    ஆனால் அவர்களுக்கு தஞ்சம் அளிப்பது குறித்து அரசும், ஜெர்மனி நேட்டோ அதிகாரிகளும் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

    இதற்கிடையே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் விரைவில் துருக்கி செல்ல உள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேசுவார் என தெரிகிறது.
    Next Story
    ×