என் மலர்

  செய்திகள்

  தெரசா மே உடன் டிரம்ப் சந்திப்பு: பிரிக்ஸிட் பிரிட்டனுக்கு அற்புதமானதாக இருக்கும் என கருத்து
  X

  தெரசா மே உடன் டிரம்ப் சந்திப்பு: பிரிக்ஸிட் பிரிட்டனுக்கு அற்புதமானதாக இருக்கும் என கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிக்ஸிட் பிரிட்டனுக்கு அற்புதமானதாக இருக்கும் என பிரதமர் தெரசா மேவை சந்திந்த பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
  வாஷிங்டன்:

  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரிட்டன் பிரதமர் தெரசா மே வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது வரும் ஜூன் மாதம் பிரிட்டனுக்கு வருதற்கு டிரம்ப் சம்மதம் தெரிவித்தார்.

  இருதலைவர்களும் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கினர். தெரசா மேவிற்கு அபிரகாம் லிங்கன் நினைவுச் சின்னத்தை டிரம்ப் வழங்கினார். 

  பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

  அப்போது பேசிய டிரம்ப், பிரிக்ஸிட் பிரிட்டனுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும். இதனால் புதிய வர்த்தகத்துக்கான கதவுகள் திறக்கும். தொழிலதிபராக இருந்த போது ஐரோப்பிய யூனியனில் இருந்து வர்த்தக ஒப்பந்தம் பெறுவது கடினமானதாக இருந்தது என்றார்.

  தெரசா மே பேசுகையில், “பதவியேற்ற உடனே அமெரிக்காவிற்கு அழைத்ததற்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதிபர் 

  தேர்தலில் வெற்றி பெற்றதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். டிரம்ப் நூறு சதவீதம் நேட்டோ படையின் பின்புலமாக இருப்பார்” என்றார்

  அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றதை தொடர்ந்து, டிரம்பை சந்தித்துள்ள முதல் வெளிநாட்டு தலைவர் தெரசா மே ஆவார்.
  Next Story
  ×