என் மலர்

  செய்திகள்

  பிரான்ஸ், ஜெர்மனி, ரஷிய தலைவர்களுடன் டிரம்ப் நாளை டெலிபோன் மூலம் பேசுகிறார்
  X

  பிரான்ஸ், ஜெர்மனி, ரஷிய தலைவர்களுடன் டிரம்ப் நாளை டெலிபோன் மூலம் பேசுகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவின் 45-வது புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் நாளை ரஷியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்களுடன் டெலிபோனில் பேசுகிறார்.
  அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் கிலாரி கிளிண்டனை வீழ்த்திய டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

  பின்னர் உலகத் தலைவர்களுடன் டெலிபோனில் பேசி வருகிறார். ஏற்கனவே கனடா, மெக்சிகோ, எகிப்து மற்றும் இஸ்ரேல் தலைவர்களுடன் பேசியுள்ளார். இந்திய பிரதமர் மோடியுடனும் டெலிபோனில் பேசியுள்ளார். மெக்சிகோ அதிபரை 31-ந்தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஆனால், இரு நாட்டு எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவது தொடர்பில் ஏற்பட்ட மோதலில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் நாளை ரஷிய அதிபர் புதின், ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே ஆகியோரிடம் டெலிபோனில் பேசுகிறார். இந்த தகவலை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் தெரேசா டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க இருக்கிறார்.
  Next Story
  ×