என் மலர்

  செய்திகள்

  சிறுமிகள் விழா: ஜப்பானில் டிரம்ப் பொம்மைகள் விற்பனை அமோகம்
  X

  சிறுமிகள் விழா: ஜப்பானில் டிரம்ப் பொம்மைகள் விற்பனை அமோகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுமிகள் விழாவையொட்டி ஜப்பானில் டிரம்ப் பொம்மைகள் அமோகமாக விற்பனை ஆகிறது.
  டோக்கியா:

  ஜப்பானில் வருகிற மார்ச் 3-ந் தேதி சிறுமிகள் விழா நடைபெறுகிறது.

  நமது நாட்டில் நவராத்திரி பண்டிகைக்கு கொலு வைப்பது போன்று ஜப்பானில் சிறுமிகள் விழாவுக்கு வீட்டை பொம்மைகளால் அலங்கரிப்பது வழக்கம். அதிகபட்சமாக 60 செ.மீ. உயரமுள்ள பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

  இதனால் தங்களது பெண் குழந்தைகள் உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை ஜப்பானியர்கள் மத்தியில் உள்ளது.

  சிறுமிகள் விழாவுக்காக பலவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றில் இந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உருவ பொம்மைகளும் விற்கப்படுகின்றன.

  மற்ற பொம்மைகளை விட டிரம்ப் பொம்மைகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால் விற்பனை அமோகமாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறியதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இருந்தும் அவரது உருவ பொம்மைகளுக்கு ஜப்பானில் அதிக கிராக்கி உள்ளது.

  பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை கூறியிருந்தாலும் அவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஜப்பானியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  ஒவ்வொரு ஆண்டும் சிறுமிகள் விழாவையொட்டி பிரபலமான 4 பேரை முன்னிலைப்படுத்தி பொம்மைகள் தயார் செய்து விற்கப்படும். அவர்களில் 2 பேர் அதெலடிக் விளையாட்டு வீரர்கள். 2 பேர் அரசியல்வாதிகள் ஆவர்.

  கடந்த ஆண்டு நடந்த சிறுமிகள் விழாவின் போது ஹிலாரி கிளிண்டன் உருவ பொம்மைகள் அமோகமாக விற்பனை ஆயின. ஏனெனில் உலகை வழி நடத்த புதிய தலைவராக அவர் வருவார் என்ற நம்பிக்கை இருந்தது.
  Next Story
  ×