என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க பாராளுமன்றக் குழுவின் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி எம்.பி. அமி பேரா நியமனம்
  X

  அமெரிக்க பாராளுமன்றக் குழுவின் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி எம்.பி. அமி பேரா நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவின் முக்கிய பாராளுமன்றக் குழுவிற்கு இந்திய வம்சாவளி எம்.பி.யான அமி பேரா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் அதிபர் தேர்தலுடன் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமி பேரா (வயது 51), ஜனநாயக கட்சி சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கலிபோர்னியாவில் இருந்து மூன்றாவது முறையாக இந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அமி பேரா தற்போது பாராளுமன்றக் குழுவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்.

  செல்வாக்கு மிக்க வெளி விவகாரங்களுக்கான பாராளுமன்றக் குழு உறுப்பினராக அமி பேராவை சக உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். துணை உறுப்பினர் அந்தஸ்து கொண்ட இப்பதவி, வளர்ந்து வரும் தலைவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

  தன் மீது நம்பிக்கை வைத்து இந்த புதிய பதவிக்கு தன்னை சக எம்.பி.க்கள் தேர்ந்தெடுத்ததை நினைத்து பெருமைப்படுவதாக அமி பேரா கூறியுள்ளார். தனது பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவராக குடியரசு கட்சியின் ராய்ஸ், உறுப்பினராக ஜனநாயக கட்சியின் எலியட் ஏஞ்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×