search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவி ஏற்பு
    X

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவி ஏற்பு

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் 45-வது ஜனாதிபதியாக நாளை பதவி ஏற்கிறார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் (வயது 70) வெற்றி பெற்றார். அவர் வாஷிங்டனில் நாளை (20-ந் தேதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அந்த நாட்டின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்துகிறார். ஒன்று, முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது. மற்றொன்று, டிரம்ப் தனது குழந்தைப்பருவத்தில் பயன்படுத்தியது. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கிற விழா, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் கொண்டாடப்படுகிறது.

    டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பதவி விலகிச்செல்கிற ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். பதவி ஏற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாஷிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர். இந்திய வம்சாவளியினரும் திரளாக குவிகின்றனர். டிரம்ப் பதவி ஏற்பு விழாவையொட்டி, அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்கனவே நடத்த தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×