என் மலர்

  செய்திகள்

  சிரியாவில் சுரங்கப்பாதை குண்டு வெடிப்பு தாக்குதல்: 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
  X

  சிரியாவில் சுரங்கப்பாதை குண்டு வெடிப்பு தாக்குதல்: 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிரியாவில் நடைபெற்ற சுரங்கப் பாதை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
  பெய்ரூட்:

  சிரிய தலைநகர் டமஸ்கஸ்க்கு வெளியே சுரங்கப்பாதை வெடிகுண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சிரிய அதிகாரிகளுள் ஒருவர் உயிரிழந்தார்.

  சிரிய கண்காணிப்புக் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. டமஸ்கஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹரஸ்தா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளை நேற்று வைத்துள்ளனர்.

  இது குறித்து கண்காணிப்பு குழுவின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறுகையில், ஹரஸ்தா மோட்டார் வாகனங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

  காயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.

  இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து சிரிய அரசின் ஊடகங்கள் உடனடியாக செய்தி எதுவும் வெளியிடவில்லை.

  செவ்வாய்க்கிழமை அரசு ஆதரவு படைகள் கிழக்கு கவுடா பகுதியில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட பண்ணைகளை கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஹரஸ்தா பகுதியில் அரசு படைகள் ராக்கெட் தாக்குதலிலும் ஈடுபட்டது.

  சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×