search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திர மண்டலத்தில் நடந்த கடைசி மனிதர் காலமானார்
    X

    சந்திர மண்டலத்தில் நடந்த கடைசி மனிதர் காலமானார்

    சந்திரனுக்கு இதுவரை சென்றவர்களில் கடைசியாக சென்ற விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான், அமெரிக்காவில் மரணமடைந்தார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான் கடந்த 1972-ம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று, அங்கு தங்கி சில ஆய்வுகளை மேற்கொண்டார்.



    இதுவரை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் கடைசியாக அங்கு ஆய்வுகளை செய்தவர் என்னும் பெருமைக்குரியவரான எயூஜின் கெர்னான், உடல் நலக்குறைவால் தனது 82-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹுஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று  மரணமடைந்தார்.

    யூஜினின் மரணத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

    நிலவில் கடைசியாக நடந்த மனிதன் என்ற பெருமை என்னோடு முடிந்துவிட கூடாது, வருங்கால தலைமுறையினரும் சந்திர மண்டலத்துக்கான பயணங்களை தொடர வேண்டும் என விரும்பிய எயூஜின், தனது 82 வயதிலும் விண்வெளி பயணம் குறித்த ஆலோசனைகளை நாட்டு தலைவர்களுக்கும், இளம் மாணவர்களுக்கும் வழங்கி வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×