என் மலர்

  செய்திகள்

  கணவருக்கு பதில் வேறு ஆணின் உயிர் அணுவை செலுத்தி கர்ப்பம்
  X

  கணவருக்கு பதில் வேறு ஆணின் உயிர் அணுவை செலுத்தி கர்ப்பம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோதனை குழாய் முறையில் கணவருக்கு பதில் வேறு ஆணின் உயிர் அணுவை செலுத்தி 26 பெண்கள் கர்ப்பம் அடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  ஆம்ஸ்டர்டாம்:

  நெதர்லாந்து நாட்டில் யுனிவர்செல் மெடிக்கல் சென்டர் என்ற குழந்தை கருத்தரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தையில்லா தம்பதிகளுக்கு சோதனை குழாய் மூலம் குழந்தை பெற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இந்த ஆஸ்பத்திரியில் சமீப காலமாக சோதனை குழாய் மூலம் பிறந்த குழந்தைகள் சிகிச்சையில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்தது.

  இங்கு சிங்கப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் உயிர் அணு மூலம் சோதனை குழாய் வாயிலாக குழந்தை பெற்றார்.

  அவர் சீன வம்சாவழியை சேர்ந்தவர். ஆனால், குழந்தை வேறு நிறத்தில் இருந்தது. எனவே, சந்தேகப்பட்டு விசாரித்த போது, அந்த பெண்ணின் கணவருக்கு பதில் வேறு ஆணின் உயிர் அணு செலுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

  மேலும் இது சம்பந்தமாக சோதனை நடத்திய போது, 26 பெண்களுக்கு இதேபோல் கணவரின் உயிர் அணு மாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 9 பெண்கள் குழந்தை பெற்று விட்டனர். 4 பேர் கர்ப்பமாக உள்ளனர். 13 பேரின் கருக்கள் சோதனை குழாயில் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.

  இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எப்படி இந்த தவறு நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளாக சோதனை குழாய் மூலம் குழந்தை பேறு நடந்து வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் இந்த வகையில் குழந்தை பெற்றுள்ளனர். அவர்களின் குழந்தைகளும் இதே போல் மாறி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பல பெண்கள் டி.என்.ஏ. சோதனை நடத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×