search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தாக்குதல்: தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு
    X

    வங்காளதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தாக்குதல்: தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

    வங்காள தேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். அந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
    வங்காள தேசத்தில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேி வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இந்திய பெண் உள்பட 22 பேர் பலியானார்கள். அதன்பின் வங்காள தேசத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்னும் மூன்று நாட்களில் ஆங்கில புத்தாண்டு தொடங்குவதால் பொதுமக்கள் அனைவரும் 31-ந்தேதி இரவு சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த சமயத்தில் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதால் பங்கரவாதிகள் தடுப்புப் பிரிவினர் நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை முடிக்கிவிட்டனர்.

    அப்போது ஜமாத்-அல்-முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் மிர்புர் தருஸ் சலாம் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றிவளைத்து ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் 30 கிலோ வெடிப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இத்தகவலை டாக்கா பெருநகர காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ‘‘டிசம்பர் 31-ந்தேதி இரவு புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தோம் என்று கூறியதாக பயங்கரவாதிகள் தடுப்புப்பிரிவின் தலைமை அதிகாரி மொனிருல் இஸ்லாம் கூறியுள்ளார்.
    Next Story
    ×