search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலாவல் பூட்டோ
    X
    பிலாவல் பூட்டோ

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டி

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டியிட போவதாக அவரது தந்தை ஆசிப் அலிசர்தாரி அறிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. இவர் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவார். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த அவர் கடந்த 18 மாதங்களாக லண்டனில் தங்கியிருந்தார்.

    நேற்று முன்தினம் பாகிஸ்தான் திரும்பிய அவர் நேற்று நடந்த பெனாசிர் பூட்டோவின் 9-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதையொட்டி இஸ்லாமாபாத்தில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. பின்னர் பெனாசிர் பூட்டோ அவரது தந்தை சுல்பிகர் அலிபூட்டோ ஆகியோரின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆசிப் அலி சர்தாரி பேசினார். அப்போது “எனது மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார். வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் அமர்ந்து பணியாற்றுவார்” என அறிவித்தார்.

    வெளி நாட்டில் இருந்து திரும்பும் சர்தாரி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். ஆளும் கட்சிக்கு எதிராக பெரிய கூட்டணியை அமைத்து நவாஸ் செரீப் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவார் என சிலர் எதிர்பார்த்தனர்.

    தனது மகன் பிலாவல் பூட்டோ மகனின் திருமணத்தை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இன்னும் சிலரோ கட்சியில் புதுமுகங்களை அறிமுகம் செய்து வைப்பார் என்றும் கூறினர். ஆனால், அவர் தனது மகன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக மட்டுமே அறிவித்தார்.
    Next Story
    ×