என் மலர்

  செய்திகள்

  ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல்: ரஷ்யா-பாக்.,-சீனா கூட்டாக எச்சரிக்கை
  X

  ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல்: ரஷ்யா-பாக்.,-சீனா கூட்டாக எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதற்கு ரஷ்யா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
  மாஸ்கோ:

  தலிபான் தீவிரவாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் ஊடுருவிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

  தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து பல்வேறு பகுதிகளை பறித்து உள்ளது. தீவிரவாதிகள் கையில் உள்ள பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதம் தங்களது படைக்கு ஆட்களை சேர்த்து வருகிறது என்றும் ஆப்கான் ராணுவம் தரப்பு தகவல்கள் வெளியாகியது. இச்சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

  பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள நான்கார்ஹார் மாகாணம் ஊடுருவல்காரர்களுக்கு முக்கியமான பகுதியாக உள்ளது. அங்கு ஐ.எஸ். தீவிரவாதம் மீதான மோகம் அதிகரிப்பு காரணமாக புதிய கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது.

  இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதற்கு ரஷ்யா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அதிகாரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
  Next Story
  ×