என் மலர்

    செய்திகள்

    கேமரூனில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் தற்கொலை படை தாக்குதல்: இருவர் பலி
    X

    கேமரூனில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் தற்கொலை படை தாக்குதல்: இருவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேமரூனில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாணவன் உள்பட இருவர் பலியானார்கள்.
    கேமரூன் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள நகரம் மோரா. நைஜீரியாவில் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் இந்நகரம் உள்ளது.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நகர மக்களும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு வந்திருந்தனர்.

    அப்போது தற்கொலை படையைச் சேர்ந்தவர் தான்மீது கட்டி வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இதில் ஒரு மாணவன், ஒரு பெண்மணி என இருவர் உயிரிழந்தனர்.

    நைஜீரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் உதவியால் செயல்பட்டு வரும் போகோ ஹராம் தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    Next Story
    ×