search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொருளாதரத்தில் பிரிட்டனை வீழ்த்திய இந்தியா: உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது
    X

    பொருளாதரத்தில் பிரிட்டனை வீழ்த்திய இந்தியா: உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட 2-வது நாடாகத் திகழும் இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனை வீழ்த்தி உலகின் மிகப்பெரிய ஆறாவது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.
    கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பின் பொருளாதாரத்தில் பிரிட்டன் நாட்டை வீழ்த்தி முன்னுக்கு வந்துள்ளது இந்தியா. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. 2 மற்றும் 3-வது இடங்களில் சீனா, ஜப்பான் நாடுகளும் 4 மற்றும் 5-வது இடங்களில் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளும் உள்ளன.

    இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்வது மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்தியா இப்பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    அடுத்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவீதமாக இருக்கும் என்றும், அதே நேரம் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.8 சதவீதத்தில் இருந்து 1.1. சதவீதமாக சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×