search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலமன் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
    X

    சாலமன் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவிகளை இன்று 6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.
    சிட்னி:

    தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவிகளை இன்று 6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.

    சாலமன் தீவுகளில் உள்ள கிராக்கிரா என்ற இடத்தில் இருந்து மேற்கு-வடமேற்கு பகுதியில் சுமார் 83 கிலோமீட்டர் தூரத்தில், பூமிக்கு அடியில் சுமார் 39 கிலோமீட்டர் ஆழத்தில் (இந்திய நேரப்படி) இன்று காலை 11.15 மணியளவில், 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இந்த  நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேத விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

    முன்னதாக, சாலமன் தீவுகளை கடந்த 10-ம் தேதி 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதும், அதற்கு முந்தைய நாள் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதும், நினைவிருக்கலாம்.
    Next Story
    ×