search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ்
    X

    வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ்

    வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 2-ந் தேதி வரை 100 பொலிவார் நோட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

    கராக்ஸ்:

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தற்போது பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. உணவு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியா வசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர். வெனிசுலா நாட் டின் 300 கோடி மதிப்பிலான 100 ரூபாய் நோட்டுகளை அதாவது 100 பொலிவார் நோட்டுகளை கடத்தல் காரர்கள் பதுக்கி வைத்துள்ளதாக அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

    அவை அனைத்தும் அண்டை நாடான கொலம்பியாவின் குகுடா, கார்டா கெனா, மைகாயோ மற்றும் புராமங்கா உள்ளிட்ட நகர குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே நாட் டின் பொருளாதா நிலையை சீரமைக்க 100 பொலிவார் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இதனால் வெனிசுலாவில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களின் கைகளில் பணம் புழங்காததால் கடைகளில் பொருட்கள் வாங்க முடியவில்லை. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. இதனால் தவித்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை உடைத்து பொருள்களை கொள்ளையடித்து சென்றனர். இதனால் கலவரம் மூண்டது. அதில் 3 பேர் பலியாகினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 பொலிவார் நோட்டுகளை வீதிகளில் வீசி எறிந்தனர். செல்லாத இந்த நோட்டு இனி எதற்கு என கோ‌ஷம் எழுப்பினர்.

    நாட்டில் பொதுமக்களின் கொந்தளிப்புக்கு வெனிசுலா அரசு பணிந்தது. உடனடியாக 100 பொலிவார் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    வருகிற ஜனவரி 2-ந் தேதி வரை 100 பொலிவார் நோட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதற்க்குள் பழைய பொலிவார் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×