என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
  X

  பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பல தரப்பினரை கொன்று குவித்த வழக்குகளில் 13 பயங்கரவாதிகளுக்கு ராணுவ கோர்ட்டுகள், மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தன.
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதி, ஓட்டல், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள், போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரையும் கொன்று குவித்த வழக்குகளில் 13 பயங்கரவாதிகளுக்கு ராணுவ கோர்ட்டுகள், மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தன.

  அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா நேற்று உறுதி செய்து உத்தரவிட்டார்.

  இவர்கள் 13 பேரும், மொத்தம் 325 பேரை கொன்றுள்ளனர். 366 பேரை காயப்படுத்தி உள்ளனர்.

  பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதல் நடந்ததின் 2-வது நினைவுநாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டபோது, இந்த பயங்கரவாதிகளின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×