என் மலர்

  செய்திகள்

  இலங்கை: முன்னாள் விடுதலைப் புலி தளபதி கருணா அம்மான் திடீர் கைது
  X

  இலங்கை: முன்னாள் விடுதலைப் புலி தளபதி கருணா அம்மான் திடீர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனித்தமிழ் ஈழம் என்ற கொள்கையுடன் போராடிவந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் தளபதியாகவும், கிழக்கு மாகாண பொறுப்பாளராகவும் இருந்த கருணா அம்மான் கைது செய்யப்பட்டார்.
  கொழும்பு:

  தனித் தமிழ் ஈழம் என்ற கொள்கையுடன் போராடிவந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் தளபதியாகவும், கிழக்கு மாகாண பொறுப்பாளராகவும் இருந்த கருணா அம்மான், பின்னர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அந்நாட்டு மந்திரிசபையில் இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.

  இதன்மூலம் இலங்கை தமிழர்களின் வெகுவான அதிருப்திக்கு உள்ளானார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இவரை பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் அரசு இடிந்துவிழுந்தது. பின்னர் பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான அரசு, ராஜபக்சே, அந்நாட்டின் மந்திரிகளாக இருந்த அவரது தம்பிகள் மற்றும் பலர்மீது ஊழல் குற்றச்சாட்டின்கீழ் வழக்குகளை தொடர்ந்தது.

  அரசு வாகனத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தி ஊழல் செய்ததாக கருணா அம்மான்மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இவர் தற்கொலை செய்துகொண்டதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் பரவின. பின்னர், அவர் உயிருடன்தான் உள்ளார் என்பது தெரியவந்தது.

  வாகன ஊழல் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜரானபோது கருணா அம்மான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  Next Story
  ×