என் மலர்

  செய்திகள்

  இந்தியா பேச்சுவார்த்தைக்கு முயன்றால் பாகிஸ்தான் வரவேற்கும்
  X

  இந்தியா பேச்சுவார்த்தைக்கு முயன்றால் பாகிஸ்தான் வரவேற்கும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முயன்றால் பாகிஸ்தான் அதனை சாதகமானதாக பரிசீலிக்கும் என்று அந்நாட்டிற்கான தூதர் அப்துல் பாஸிட் தெரிவித்துள்ளார்.
  இஸ்லாமாபாத்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கோட்டு பகுதியில் உரி, சர்ஜிக்கல் தாக்குதல்களை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அத்துமீறல்களில் ஈடுபடுவதாக இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  இதனை தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தது. மேலும், பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நிபந்தனை விதித்தது.

  இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முயன்றால் பாகிஸ்தான் அதனை சாதகமானதாக பரிசீலிக்கும் என்று அந்நாட்டிற்கான தூதர் அப்துல் பாஸிட் தெரிவித்துள்ளார்.

  இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் ஆசியாவின் அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் அடுத்த வாரம் இந்தியா வருகின்ற நிலையில் இந்த கருத்தினை அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×