என் மலர்

  செய்திகள்

  கோஸ்ட்டரிக்காவை தாக்கிய ஓட்டோ புயலுக்கு 9 பேர் பலி
  X

  கோஸ்ட்டரிக்காவை தாக்கிய ஓட்டோ புயலுக்கு 9 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிகாராகுவா மற்றும் கோஸ்ட்டரிக்காவை தாக்கிய ஓட்டோ புயலுக்கு 9 பேர் பலியானதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
  சான் ஜோஸ்:

  பசிபிக் பெருங்கடல் பகுதியை ஒட்டியுள்ள மத்திய அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நிகாராகுவா மற்றும் கோஸ்ட்டரிக்காவை நேற்று அதிவேக ‘ஓட்டோ’ புயல் தாக்கியது, இரண்டாம் எண் எச்சரிக்கையுடன் அடையாளம் காணப்பட்டு பசிபிக் பெருங்கடல் பகுதியை அச்சுறுத்திவந்த ‘ஓட்டோ’ புயல் சுமார் 110 கிலோமீட்டர் வேகத்தில் நேற்று கரையை கடந்தது.

  முன்னதாக, நேற்று இதே பசிபிக் பெருங்கடல் பகுதியை 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், அதைதொடர்ந்து சுனாமி பேரலைகளும் தாக்கியிருந்தது.

  இந்நிலையில், கோஸ்ட்டரிக்கா நாட்டின் கடலோரப் பகுதிகளில் புயல் மற்றும் மழையை தொடர்ந்து சரிந்து விழுந்த மரங்களால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், புயல் மற்றும் மழைசார்ந்த விபத்துகளில் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகவும், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  Next Story
  ×