என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஈராக்கில் டிராக்டர் வெடிகுண்டு தாக்குதல்-ஷியா யாத்ரீகர்கள் உட்பட 70 பேர் பலி
By
மாலை மலர்24 Nov 2016 3:23 PM GMT (Updated: 24 Nov 2016 3:23 PM GMT)

ஈராக்கில் ஷியா யாத்திரிகர்களின் பேருந்துகளை குறிவைத்து நடத்தப்பட்ட டிராக்டர் வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
பாக்தாத்:
ஈராக் நாட்டின் கர்பாலா நகரில் ஷியா பிரிவு யாத்ரீகர்களை குறி வைத்து டிராக்டர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து தென்கிழக்கில் சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோமாலி கிராமத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அர்பயீன் பண்டிகையொட்டி கர்பாலா புனித தளத்திற்கு சென்று ஷியா யாத்ரீகர்கள் பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெட்ரோல் பங்கு ஒன்றின் அருகில் பேருந்துகள் நின்று கொண்டிருந்த போது அங்கு டிராக்டர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தனர். இது குறித்து போலீஸ் ஒருவர் கூறுகையில், “பெட்ரோல் நிலையத்தில் சுமார் 7 பேருந்துகள் வரை நின்றது” என்றார்.
ஈராக்கின் கர்பாலா புனித தளத்திற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×