search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பளத்தில் இந்தியாவை முந்திய பாகிஸ்தான் எம்.பி.க்கள்
    X

    சம்பளத்தில் இந்தியாவை முந்திய பாகிஸ்தான் எம்.பி.க்கள்

    பாகிஸ்தான் பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு 146 சதவீதம் சம்பள உயர்வு அளிக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 14 வருடங்களில் சொற்பமான அளவே எம்.பி.-க்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதனால் சம்பள உயர்வு கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இதனையடுத்து எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுதி அளிக்கப்பட்டது.

    அதன்படி பாராளுமன்றத்தின் தேசிய சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களுக்கு 146 சதவீதம் வரை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன்மூலம் எம்.பி.க்களின் சம்பளம் 60,996 ரூபாயிலிருந்து 1,50,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது 145.9 சதவீதம் உயர்வு ஆகும்.

    அதேபோல், தேசிய சபை சபாநாயகர் மற்றும் செனட் சேர்மனுக்கு 26 சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் சம்பளம் ரூ.1,62,659-லிருந்து, ரூ.2,05,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துணை சபாநாயகருக்கு ரூ.1,50,454-லிருந்து, ரூ.1,85,000-ஆக 23 சதவீதம் சம்பளம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பள உயர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தற்போது பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு ரூ.90 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் வரை ரூ.45 ஆயிரம் ஆக இருந்து, பின்னர் நூறு சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.
    Next Story
    ×