search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சில வினாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
    X

    சில வினாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    சில வினாடிகளில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    நியூயார்க்:

    பள்ளி செல்லும் சிறுவன் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்தாலும் சார்ஜ் விரைவில் இறங்கி விடுவதால் பெரும்பாலோர் எங்கு சென்றாலும் சார்ஜர்களையும் உடன் எடுத்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இந்த சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    'பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து விடலாம். நானோ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.

    சாதாரண பேட்டரிகளை விட இந்த பேட்டரி அதிக சக்தி கொண்டதாக இருக்கும். 30,000 முறை ரீசார்ஜ் செய்ய முடியும். அமெரிக்காவின் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கும் இந்த தொழில்நுட்பம் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புதான். இந்த சூப்பர்கெப்பாசிட்டர்கள் சந்தைக்கு வரும் வகையில் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. எனவே, உடனடியாக சந்தைக்கு வர வாய்ப்பில்லை.

    ‘இந்த பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டர்கள் விற்பனைக்கு தயாராகவில்லை. ஆனால், நிரூபிக்கப்பட்ட கருத்து ஆகும். மேலும், பல்வேறு தொழில்நுட்பங்களில் உள்ள அதிக குறைபாடுகளை எங்கள் ஆய்வு காட்டுகிறது’ என்று ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஜங் தெரிவித்தார்.
    Next Story
    ×