என் மலர்

  செய்திகள்

  364 வயாகரா மாத்திரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய தென்கொரியா பெண் அதிபர்
  X

  364 வயாகரா மாத்திரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய தென்கொரியா பெண் அதிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்கொரியாவின் பெண் அதிபர் 364 வயாகரா மாத்திரைகளை வாங்கியதால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
  சியோல்:

  தென்கொரியா நாட்டில் பார்க்குன் ஹெயின் அதிபராக இருக்கிறார். பெண் அதிபரான இவர் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவருடைய நீண்ட கால தோழி சோய் சூன். இவரை தனது உதவியாளர் போல் பெண் அதிபர் வைத்திருந்தார்.

  ஆனால், சோய் சூன் தனது அதிகாரங்களை கையில் எடுத்து ஏராளமான தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது.

  இதனால் அதிபர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியினரும் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

  இந்த நிலையில் அதிபர் பார்க்குன் ஹெயின் ஆண்களுக்கான செக்ஸ் வீரிய மாத்திரையான வயாகரா மாத்திரைகளை அதிக அளவில் அரசு பணத்தில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 364 மாத்திரை இவ்வாறு வாங்கி இருக்கிறார்.

  ஏன் இந்த மாத்திரைகளை அவர் வாங்கினார் என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி அதிபர் மாளிகை ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிபர் சுற்றுப்பயணம் செய்தார். அந்த நாடுகள் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் இருக்கின்றன. இதனால் அங்கு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என கருதி அதை தடுக்கும் வகையில் வயாகரா மாத்திரை வாங்கியதாகவும், ஆனால், அந்த மாத்திரையை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

  ஆனால், இதுபற்றி எதிர்க்கட்சியினர் கூறும் போது, அதிபர் தனி ஒரு உல்லாச உலகத்தில் வாழ்ந்தார். அதற்காக இந்த மாத்திரைகள் அவருக்கு தேவைப்பட்டு இருக்கும் என்று கூறி உள்ளனர்.


  Next Story
  ×