என் மலர்
செய்திகள்

இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம்
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழுபேரை சுட்டுக்கொன்றதாக இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிம்பெர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் கடந்த 14-ம் தேதி பின்னிரவு இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டிருந்தன.
இந்நிலையில், பலியான வீரர்களை தியாகிகள் என்று புகழாரம் சூட்டியும், இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
’தேவையற்ற வகையில் இந்திய வீரர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஏழு வீரர்கள் பலியானதை இந்த பாராளுமன்றம் வன்மையாக கண்டிக்கிறது’ என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story