என் மலர்

    செய்திகள்

    டிரம்ப் பேத்தி ஒப்புவிக்கும் சீன மொழி கவிதை
    X

    டிரம்ப் பேத்தி ஒப்புவிக்கும் சீன மொழி கவிதை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டிரம்ப் பேத்தி ஒப்புவிக்கும் சீன மொழி கவிதை சமூக வலை தளங்களில் பரவுகிறது.

    நியூயார்க்:

    அமெரிக்க புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். அவரது மகள் இவாங்கா டிரம்ப் இவருக்கு 5 வயதில் அராபெல்லா குஷ்னர் என்ற மகள் இருக்கிறார்.

    டிரம்பின் மகள் வழிப் பேத்தி ஆன இவள் சீன மொழி கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் பங்கேற்று இருந்தார். புத்தாண்டையொட்டி தனது மகள் பங்கேற்ற போட்டியின் வீடியோவை இவாங்கா டிரம்ப் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.

    தற்போது அது சீனாவில் வைரஸ் ஆக பரபரப்பாக பரவுகிறது. இந்த வீடியோவில் அராபெல்லா சீன ஸ்டைலில் சிவப்பு நிற கவுன் அணிந்திருந்தார். அவர் சீன மொழியை பிழையின்றி அழகுற உச்சரித்து அனைவரின் பாராட்டையும பெற்றார்.

    டிரம்பின் பேத்தி குறித்து வலை தளங்களில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒருவர் கூறும் போது டிரம்பை எனக்கு பிடிக்காது. ஆனால் அவரது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் அழகானவர்கள். அவர்களை மிகவும் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    சீனா-அமெரிக்கா இடையேயான புதிய தலைமுறை நட்பு தூதர் உருவாகி விட்டார் என மற்றொருவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×