search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் மீண்டும் தேர்வு
    X

    அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் மீண்டும் தேர்வு

    அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் குடியரசு கட்சியால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் குடியரசு கட்சியால் மீண்டும் தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் பாராளுமன்ற அவை உறுப்பினர்கள் பவுல் ரையானை ஒருமனதாக தேர்வு செய்தனர்.

    அதிபர் பராக் ஒபாமின் நிர்வாகத்தின் கீழ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்க பாராளுமன்றத்தின் ரையான் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதனையடுத்து தற்போது டொனால்டு அதிபராக வெற்றி பெற்றுள்ள நிலையில், ரையான் மீண்டும் தேர்வாகியுள்ளார். 54-வயதான அவர் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இருந்து மந்திரியாக தேர்வு செய்யப்பட்டவர்.

    முன்னதாக நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஹிலாரியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்கிறார்.
    Next Story
    ×